Saturday 25 May 2019

ஷட் பலத்தின் முக்கியத்துவம் :


ஷட் பலத்தின் முக்கியத்துவம் :
ஷட் பலம் என்பது ஆறு வகையான பலத்தை உள்ளடக்கியது. அவை
1.       ஸ்தான பலம் ,
2.       திக் பலம்,
3.       கால பலம்,
4.       சேஷ்ட பலம்,
5.       நைசர்கிக பலம்,
6.       திரிக் பலம் .
ஸ்தான பலம் என்பது உச்ச பலம் , சப்தவர்க்க பலம் , ஒஜயுக்மா பலம் , கேந்திர பலம்,த்ரிக்கென பலம் போன்றவற்றை உள்ளடக்கியது. இதை போன்று ஒவொன்றாக விவரித்து கொண்டு போகலாம் . மேலும் விவரங்களுக்கு ஐயா அகோர மூர்த்தியின் பதிவை படிக்கவும் . இப்பதிவின் நோக்கம் ஷட் பலத்தின் முக்கியத்துவத்தை உங்களக்கு புரியவைப்பது .
ஒரு சிறிய உதாரணம் மூலம் இதனை விளக்க உள்ளேன். ஒரு மாணவன் (ஒரு கிரகம்) தேர்வு எழுதுகிறான் என வைத்து கொள்வோம். அந்த தேர்வு ஆறு பாடங்களை கொண்டது.
1.       தமிழ் (ஸ்தான பலம்)
2.       ஆங்கிலம் (திக் பலம்,
3.       கணிதம் (கால பலம்,
4.       அறிவியல் (சேஷ்ட பலம்,)
5.       சமுக அறிவியல் (நைசர்கிக பலம்)
6.       கணினி அறிவியல் (திரிக் பலம்)
தமிழ் வினாத்தாள் ஆறு பகுதிகளை கொண்டதாக வைத்துகொள்வோம். அதில் உள்ள பகுதி உச்ச பலம் , சப்தவர்க்க பலம் போன்றவை .
எவ்வாறு ஒரு மாணவனின் ஒரு பாடத்தில் ஒரு பகுதியல் பெற்ற மதிப்பெண்களை கொண்டு அவரின் தரத்தை நிர்ணியக்க முடியாதோ . அதே போல் ஒரு கிரகம் ராசி , நவம்சம் உள்ளிட்ட சப்தவர்கங்களில் பெற்ற ஸ்தான பலத்தை வைத்துகொண்டு அதன் முழு பலத்தையும் நிர்ணயம் செய்ய முடியாது . ஒரு மாணவரின் தரத்தை சோதிக்க அவர் ஆறு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் உதவமோ , அதே போல் ஒரு கிரகத்தின் பலனை மேல் சொன்ன ஆறு வகையான பலனை கொண்டே அறிய முடியும் . வெறும் ஆட்சி, உச்சம் , பகை , நீசம் கொண்டு ஒரு கிரகத்தின் பலனை நிர்ணயம் செய்வது மிகவும் தவறாகும் . இந்த ஷட் பலத்தினை அறிய மூளையை போட்டு கசக்க தேவை இல்லை . கணினி மென்பொருள் மூலம் வினாடியில் அறியலாம் ..
எனவே கிரகத்தின் பலனை ஷட்பலம் மூலம் அறிவோம் ...தெளிவு பெறுவோம்...


No comments:

Post a Comment