Saturday 25 May 2019

கிரகங்களின் வேகம் -ஓர் பார்வை


கிரகங்களின் வேகம் -ஓர் பார்வை

கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ராசி மண்டலத்தில் பயணம் செய்வதை அனைவரும் அறிந்ததே . சர்ப்ப கிரகங்கள் எப்போதும் பின்னோக்கியே நகரும் . சூரியனும் , சந்திரனும் , ஒரே சீரான வேகத்தில் ஓய்வொரு ராசியையும் கடந்து வருவார்கள் . பஞ்ச பூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் , செவ்வாய் , சனி போன்றவை எப்போதும் ஒரே சீராக பயணம் செய்வதில்லை . சில நேரங்களில் வேகமாகவும் , சில நேரங்களில் மெதுவாகவும் , சில நேரங்களில் பின்னோக்கியும் பயணம் செய்யும் . கிரகங்களின் பயணத்தை அதன் வேகத்தை அடிப்படையாக கொண்டு பராசரர் அவர்கள்  எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளார் . அவை
1.       வக்கிரம்
2.       அனுவக்கிரம்
3.       ஸ்தம்பனம்
4.       மந்த
5.       மந்ததார
6.       சம
7.       சார
8.       அதிசார ஆகும் .
கிரகத்தின் வலிமையை கணக்கிட பயன்படும் ஷட் பலங்களில் ஒன்றான “சேஷ்ட பலம்” என்பது கிரகத்தின் வேகத்தை அடிபடையாக கொண்டது.

1.வக்கிரம்- வக்கிரம் என்பது பின்னோக்கிய நகர்வு ஆகும் .இது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு வக்கிரம் அடைந்த கிரகங்கள் ஷட் பலத்தில் ஒன்றான சேஷ்ட பலத்தில் 60 சஸ்டியம்சங்களை அதாவது ஒரு ரூபம் பெரும் . சஸ்டியம்சம், ரூபம் போன்றவை கிரகத்தின் வலிமையை கணக்கிட பயன்படும் அலகு ஆகும்.
2. அனு வக்கிரம் – ஒரு கிரகம் பின்னோக்கி நகர்ந்து பின்னுள்ள ராசியை அடைவது அனு வக்கிரம் ஆகும் . உதாரணமாக, விருச்சகத்தில் உள்ள சனி வக்கிரம் பெற்று துலாமிற்கு செல்வது ஆகும். இவ்வாறு அனு வக்கிரம் அடைந்த கிரகம் 30 சஷ்டியம்சங்களை பெரும் .
3. ஸ்தம்பனம் – ஒரு கிரகம் பயணிக்காமல் ஒரே இடத்தில் இருக்கும் நிலைக்கு ஸ்தம்பனம் என்று பெயர் . ஸ்தம்பன நிலையை அடைந்த கிரகம் 15 சஷ்டியம்சங்களை பெரும் .
4. மந்த- ஒரு கிரகம் சாதாரண வேகத்தை விட மெதுவாக நகர்ந்தால் அதற்கு மந்த கதி என்று பெயர் . மந்த கதியை அடைந்த கிரகம் 15 சஷ்டியம்சங்களை பெரும் .
5. மந்த தார – ஒரு கிரகம் மந்த கதியை விட இன்னும் குறைவான வேகத்தில் பயணிக்கும் நிலைக்கு மந்த தார எனப்படும். மந்த தார நிலையை அடைந்த கிரகம் 15 சஷ்டியம்சங்களை பெரும் .
6. சம கதி- ஒரு கிரகம் ஒரே சீரான வேகத்தில் பயணிக்கும் நிலைக்கு சமகதி என்று பெயர் . சம கதியல் உள்ள கிரகம் 30 சஷ்டியம்சங்களை பெரும் .
7. சார கதி – ஒரு கிரகம் சாதாரண வேகத்தை விட மிக வேகமாக பயணித்தால் அந்த கிரகம் சார கதியல் உள்ளது என கொள்ளலாம் . சார கதி அடைந்த கிரகம் 45 சஷ்டியம்சங்களை பெரும் .
8. அதிசார கதி – ஒரு கிரகம் சார கதியல் பயணம் செய்து அடுத்த ராசியை அடைந்தால் இதற்கு அதிசாரம் என்று பெயர் . அதிசார கதியல் உள்ள கிரகம் 30 சஷ்டியம்சங்களை பெரும் .
இவ்வாறு கிரகங்கள் பயணிக்கும் வேகதிற்கேற்ப மதிப்பெண்களை கொடுத்துள்ளார் மகரிஷி பராசரர் . இதில் வக்கிரம் அடைந்த கிரகத்திற்கு அதிக மதிப்பெண்கள் கொடுகப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது .








No comments:

Post a Comment