Saturday 25 May 2019

நவாம்சமும், சுபத்துவமும்:


நவாம்சமும், சுபத்துவமும்:

ஒரு கிரகம் சுபத்துவம் அடைய பல படிநிலைகள் இருந்தாலும், நவாம்சம் இன்றியமையாதது ஆகும் . நவம்சாம் என்பது ராசியயை ஒன்பது பகுதிகளாக பிரிப்பது என்பது அனைவரும் அறிந்ததே . இத்தகைய  நவாம்சத்தில் சுபத்துவம் அடைந்த கிரகம் நன்மை செய்யும்.  பொதுவாக சுபத்துவம் அடைந்த கிரகம் தனது பாவ காரகத்துவங்களை செய்யாமல் நன்மையை செய்யும் என்பதை ஐயா ஆதித்ய குருஜியின் சுபத்துவம், மற்றும் சூட்சம வலு பற்றிய கட்டுரைகளை படித்தவர்கலுக்கு தெரியும். இயற்கை பாபர்கள் சுபத்துவம் அடைந்தால் மட்டுமே நன்மை செய்யும். எனவே இந்த இயற்கை பாபர்கலான சனி (முழு பாபர் ) செவ்வாய் (முக்கால் பாபர் ) சூரியன் ( அரை பாபர் ) ராசி அல்லது நவாம்ச சக்கிரத்தில் சுபத்துவம் அடைய வேண்டும் . ராசி சக்கிரத்தில் சுபத்துவம் அடையவில்லை என்றாலும், இந்த பாவ கிரகங்கள், நவாம்சத்திலாவது சுபத்துவம் அடைய வேண்டும் . நவாம்சத்தில் ஒரு கிரகம் சுபத்துவம் அடையும் படிநிலைகலை பார்போம்.
1.       ஒரு கிரகம் நவாம்சத்தில் சுபர்களின் வீட்டில் இருப்பது.
2.       நவாம்சத்திலும் மிக உன்னதமான புஷ்கர நவாம்சத்தில் இருப்பது.
3.       ஒரு கிரகம் நவாம்சத்தில் சுபர்களுடன் இனைந்து இருப்பது.
4.       ராசியல் ஆட்சி அல்லது உச்சம் அடைந்த  சுப கிரகங்ககலுடைய      நவாம்ச வீட்டில் இருப்பது .
5.       ராசியல் சந்திரன் பூரண சந்திரனாகி, நவாம்சத்தில் சந்திரனின் வீடான  கடகத்தில் இருப்பது .
நவாம்சத்தில் சுபர்களுடன் இணைந்த பாவ கிரகம் சுபத்துவம் அடையும் அதே வேலையில் சுப கிரகங்கள் தன் சுபத்துவத்தை இழக்கும்.
உதாரணமாக அம்சத்தில் செவ்வாய் அல்லது சனியுடன் இணைந்த குரு அந்த பாவ கிரகத்தை சுபதுவபடுத்தி தன் சுபத்துவதை இழப்பார். இத்தகைய அமைப்பில் ஒருவருக்கு குருவுடன் இணைந்த  சனி அல்லது செவ்வாய் தசை யோகம் அளிக்கும். ஆனால் குரு தசை மத்திமமான பலனை தான் தரும்.  எனவே ராசி சக்கிரத்தை வைத்து மட்டும் ஒரு கிரகத்தின் சுப நிலையை கணக்கிட கூடாது . அம்சத்தையும் உற்று நோக்க வேண்டும் .


No comments:

Post a Comment