Saturday 25 May 2019

உச்ச அம்மாவாசை சந்திரனா, நீச பௌர்ணமி சந்திரனா-


உச்ச அம்மாவாசை சந்திரனா, நீச பௌர்ணமி சந்திரனா- எதற்கு வலிமை அதிகம்?
ஜோதிடமே ஒளியை மையமாககொண்டது. கிரகங்களை ஒளிகளாக புரிந்து கொண்டால் ஜோதிடம் எளிமைதான் . ஒரு கிரகத்தின் ஒளியை வைத்தே அந்த கிரகத்தின் சுபத்துவத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் . சந்திரனும் அவ்வாரே . வளர்பிறையல் ஒளி திறனோடு இருக்கும்பொழுது சுபகிரகமாகவும், தெய்பிறையல் ஒளி மங்கி இருக்கும்பொழுது அசுபகிரகமாகவும் உள்ளார். ஒரு கிரகம் உச்சம் அடையும்பொழுது முழு ஒளிதிரனோடு இருக்கும் . உதாரணமாக சூரியன் மேஷத்தில் உச்சம் ஆகும் சமயத்தில் வெயில் சுட்டு எரிக்கிறது என்பதை அனைவரும் அறிந்ததே. அதேபோல் குருவும் கடகத்தில் உச்சம் ஆகும்பொழுது முழு ஒளி திறனோடு இருப்பார் . மற்ற கிரகங்களும் அவ்வாரே உச்சசமடையும்பொலுது முழு ஒளி திறனோடு இருப்பார்கள் . இதற்கு விதி விளக்கு சந்திரன் மட்டுமே . சந்திரன் உச்சம் அடையும்போதெல்லாம் முழு ஒளி திறனோடு இருப்பதில்லை . அவர் பௌர்ணமி அன்று மட்டுமே பூர்ண ஒளியோடு இருப்பார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உச்ச பௌர்ணமி சந்திரனாகி இருப்பார் . அது கார்த்திகை மாதம் என்பது அனைவரும் அறிந்ததே . ஒளி திறன் இல்லாமல் சந்திரன் உச்சம் ஆனால் அது உச்சம் கிடயாதா? என்ற கேள்வி உங்களுக்குள் எலலாம். இதனை எளிமையாக ஐயா ஆதித்ய குருஜி விளக்கயுள்ளார். சந்திரனின் ஒளி திறனை நின்னயிக்க, அன்றைய நாளில் வானில் உள்ள  சந்திரனின் ஒளி திறனை கவனித்து அத்துடன் ஆட்சி , உச்சம் , நீசம் போன்றவற்றை இணைத்து பார்க்க வேண்டும் . அம்மாவசை நாளில் வானில் சந்திரனை காண இயலாது அன்றைய நாளில் சந்திரன் உச்சம் அடைந்தாலும் ஒளி திறன் இன்றி இருப்பதால் அவர் மற்ற கிரகங்களை சுபதுவம் படுத்தும் வலிமை இழக்கிறார் . “மேலும் அம்மாவாசை நிலையல் உள்ள  உச்ச சந்திரனை  மற்ற ஒளி பொருந்திய சுபகிரகங்கள் பார்த்தால் சந்திரன் தான் கடன் பெற்ற ஒளி மூலம் சுபத்துவம் ஆகி, உச்ச நிலையிலும் இருப்பதால், தேய் பிறையில் இருந்தாலும் சுபராக மாருவார்” என்று ஐயா ஆதித்ய குருஜி ஒரு வீடியோவில் கூறியுள்ளார் . எனவே அம்மாவாசை நிலையல் உள்ள உச்ச சந்திரனின் வலுவை நிர்ணயம் செய்ய அவர் சுபத்துவம் அடைந்து உள்ளாரா என்பதை கவனிக்க வேண்டும் .  

No comments:

Post a Comment