Saturday 25 May 2019

ஆத்ம காரகன் – ஓர் ஆய்வு :


ஆத்ம காரகன் – ஓர் ஆய்வு :
  
வேத ஜோதிடம் பல நுனுக்கங்கலையும், பல சூட்சமங்கலையும் கொண்ட ஒரு பெருங்கடல் ஆகும் . இந்த பெருங்கடலில் சிலருக்கு விலை மதிக்கமுடியாத முத்து கிடைக்கும் . சிலருக்கு சிப்பிகள் கிடைக்கும். சிலருக்கு வலம்பொறி சங்கு போன்ற விலைஉயர்ந்த பொருள் கிடைக்கும் . சொல்லபோனால், அவரவர் முயற்சிகேற்ப சூட்சமங்கள் கிடைக்கும் . அவ்வாறு வேத ஜோதிட கடலில் உள்ள ஒரு சூட்சமம் தான் “ ஆத்மகாரகன்” ஆகும் . இந்த ஆத்மகாரகனை பற்றி மூல நூல்களான “ பிருகத்பராசரஹோரை”, உத்திரகாலமிர்தம், ஜெயமுனி சூத்திரம் போன்றவை குறிப்பிடுகிறது. மகாகவி காளிதாசர் இந்த ஆத்மகாரகனை “ அதிக கிரகம்” என்று குறிப்பிடகிறது . யார் இந்த ஆத்காரகன் என்ற கேள்வி உங்களக்கு எலலாம். வேத ஜோதிடத்தில் “சூரியனே” ஆத்மகாரகன் ஆகும் . இருப்பினும் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தில் ஆத்மகாரகன் ஒருவர் இருப்பார் . நவகிரகங்களில் ராகு , கேதுவை தவிர எந்த கிரகம் தான் இருக்கும் ராசியல் அதிக பாகைகளை  கடந்து வந்துஉள்ளதோ அந்த கிரகமே ஆத்மகாரகன் அல்லது அதிக கிரகம் ஆகும் .
உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் தான் இருக்கும் ராசியல் 27 பாகையல் உள்ளார் , குரு 12 பாகையில் உள்ளார் , சூரியன் 8 பாகையில் உள்ளார், புதன் 12 பாகையில் உள்ளார், சனி 21 பாகையில் உள்ளார், செவ்வாய் 15 பாகையில் உள்ளார், சந்திரன் 8 பாகையில் உள்ளார்  எனில் இங்கு சுக்கிரன் மற்ற கிரகங்களை விட அதிக பாகை கொண்டதால் இவரே ஆத்ம காரகர் ஆகும் . ஆத்ம காரகருக்கு அடுத்த படியாக அமாத்திய காரகன் , பிராத்ரு காரகன் , மாத்ரு காரகன் , ஞாதி காரகன் , தார காரகன் உள்ளனர் . இவர்கள் ஆத்மகாரகனுக்கு அடுத்து அடுத்து குறைந்த பாகைகளை கொண்டவர்கள் ஆகும் .
ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்வதில் ஆத்ம காரகன் மிக முக்கியமாக கருத படுகிறார் . ஒருவருக்கு ஆத்ம காரகனின் காரகதுவத்திலோ, அவருடன் தொடர்பு பெற்ற கிரகத்தின் காரகதுவத்திலோ ஒருவருக்கு தொழில் அமையும். இங்கு தொடர்பு என்பது
1 ஆத்மகாரகன் இருக்கும் நவாம்ச அதிபதி
2 நவாம்சத்தில் ஆத்மகாரகனுடன் இணைவு பெற்ற கிரகம் ,
 3.ராசி சக்கிரத்தில் ஆத்மகாரகன் பெற்ற பார்வை
 4. ஆத்மகாரகன் பெற்ற சாரம்
5. ஆத்மகாரகன் பெற்ற இணைவு
இதை இன்று பல ஜாதகங்களில் ஆராய்ந்த பொது 90%  பொருந்தி வருவதை பார்தேன் . உதாரணமாக ஆசிரியர்களாக உள்ள எனது நண்பர்களின் ஜாதகத்தில், ஆத்மாகாரகர்களாக பல கிரகங்கள் வந்தாலும் அந்த ஆத்மகரகர்கள் நவாம்சத்தில் குருவின் வீட்டிலோ , குருவின் இணைவையோ பெற்று உள்ளனர் . மேலும் மருத்துவ நண்பரின் ஜாதகத்தில் ஆத்மகாரகன் செவ்வாயுடன் தொடர்பு கொண்டுள்ளார் . எனது மற்றொரு ஜோதிட நண்பருக்கு ஆத்மகாரகனாக புதனே வந்துள்ளார் . எனவே நீங்களும் ஆய்வு செய்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள் .
நீங்கள் செய்யவேண்டியவை
1.       உங்கள் ஜாதகத்தில் ஆத்மகாரகனை கண்டுபிடியுங்கள்.
2.       ஆத்ம காரகன் உள்ள நவாம்ச அதிபதி கண்டுபிடியுங்கள்.
3.       ராசியிலும் அம்சத்திலும் ஆத்ம காரகன் தொடர்பு கொள்ளும் கிரகத்தை அறிந்து அந்த கிரகங்களின் காரகதுவத்தை நீங்கள் செய்யும் தொழிலோடு ஒப்பிடுங்கள்.











No comments:

Post a Comment