Saturday 25 May 2019


ஒரு பாவகம் எப்பொழுது வலிமை பெரும் ?
எந்த ஒரு ஜாதகத்திலும் ஒரு குறிப்பிட்ட பாவகம் வலிமை இழந்தால் அதனுடைய காரகத்துவம் பாதிக்கும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் வலிமை இழந்தால் அந்த பாவகத்தின் காரகத்துவமான தனம் , வாக்கு, குடும்பத்தை பாதிக்கும் . எனவே ஒருவருடைய ஜாதகத்தில் பாவங்கள் வலிமை பெறுவது இன்றியமையாதது ஆகும் . ஒரு பாவம் வலிமையடையும் விதம் பற்றி தற்போது காண்போம் .
1.       ஒரு பாவாதிபதி தன் பாவகத்தை பார்பதன் மூலம் அந்த பாவகம் வலு பெரும்.
2.       பாவகத்தில் சுப கிரகங்கள் இருத்தல்
3.       பாவகத்தை சுப கிரகங்கள் பார்த்தல்
4.       பாவாதிபதி நின்ற ராசியதிபதியும், அம்சாதிபதியும்
வலு பெறுதல் (உத்திரகாலாமிர்தம்) 
5.       ஷட் பல ரீதியாக பலம் பெற்ற சுபகிரகம் ராசி மற்றும் அம்சத்தில் நட்பு வீட்டில் இருந்தால் அந்த சுப கிரகம் வலுபெற்று தன்னுடைய ஆதிபத்தியத்தை வலுவுடன் செய்யும். ((உத்திரகாலாமிர்தம்)   
  


No comments:

Post a Comment