Saturday 25 May 2019

திக் பலத்தின் சூட்சமம்

திக் பலத்தின் சூட்சமம்
 திக் பலம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையை நிர்ணயிக்க மூல நூல்களில் சொல்லப்பட்ட “ ஷட் பலத்தில்”  ஒன்றாகும். ஷட் பலம் என்பது ஸ்தானபலம், திக்பலம் , திருக்பலம்,கால பலம் , அயன பலம் ,சேஷ்ட பலம் போன்ற ஆறு வகையான பலத்தை உள்ளடக்கியது ஆகும். இதில் திக் பலத்தின் சூட்சமம் பற்றி பார்போம். “திக்” என்றால் திசை என்று பொருள் படும் . குறிப்பிட்ட ஒரு கிரகம் குறிப்பிட்ட ஒரு திசையில் நிற்கும்பொழுது வலிமை பெரும் . இதுவே திக் பலம் எனப்படும் .
  இதன்படி குரு மற்றும் புதன் கிழக்கான லக்கினத்தில் திக் பலம் அடைகிறது. சுக்கிரன் மற்றும் சந்திரன் வடக்கான நான்காம் பாவத்தில் திக் பலம் அடைகிறது. சனி மேற்கு திசையான ஏழாம் இடத்தில் திக் பலம் அடைகிறது .சூரியன் மற்றும் செவ்வாய் தெற்கு திசையான பத்தாம் வீட்டில் திக் பலம் அடையும் .
இவ்வாறு திக் பலம் பெரும் கிரகமோ , திக் பலத்தை நெருங்கும் கிரகமோ வலிமையடன் இருக்கும் . திக் பலத்தை பெரும் கிரகம் ஷட் பலத்தில் ஒரு ரூபத்தை பெரும் . ரூபம் என்பது கிரகத்தின் வலிமையை கணக்கிட பயன்படும் அலகு ஆகும் . ஒரு கிரகம் தான் திக் பலம் அடையும் ராசியல் முன் ராசியுலோ பின் ராசியிலோ இருந்தால் கூட அக்கிரகம் வலுவுடன் இருபபதாகவே அர்த்தம் . ஐயா ஆதித்ய குருஜி அவர்கள் ஓர் வீடியோவில் திக் பலம் பற்றி கூறும்பொழுது, “குரு, புதன் லக்கினத்திற்கு 12 இல் மறையும் போது அவர்கள் திக் பலத்தை பெரும் லக்கினத்தை நெருங்குவதால் அவர்கள் வலிமையாகவே இருப்பார் . இங்கு இவர்கள் லக்கினதிற்கு பனிரெண்டில் மறைந்துள்ளார்கள் என்று கணித்தால் பலன் தவறிவிடும்” .
இதை போன்றே மற்ற கிரகங்களும் திக் பலத்தை நெருங்கும் பொழுதும் திக் பலம் பெரும் ராசிக்கு அடுத்த ராசியல் இருக்கும்பொழுதும் வலுவுடனே இருக்கும். உதாரணத்திற்கு விருச்சிக லக்கினதிற்கு செவ்வாய் பத்தாம் வீடான சிம்மத்தில் திக் பலம் அடைவார். இதே செவ்வாய் கடகத்தில் இருக்கும்பொழுது திக் பலத்திற்கு அருகில் இருப்பார் . கன்னியில் இருக்கும்பொழுது திக் பலத்தை விட்டு சற்றே தள்ளி இருப்பார் . இந்த நிலையிலும் செவ்வாய் வலுவுடனே இருப்பார். இதற்கு செவ்வாயின் பாகையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் . திக் பலம் பெற்ற கிரகம் நன்மை செய்யும் என்பதால் ஜாதகத்தில் கிரகங்கள் திக் பலம் பெறுவது நன்மையே. நீசம் பெற்ற கிரகம் திக் பலம் பெற்றால் ஓரளவிற்கு தனது நீச தன்மை இழந்து நன்மை செய்யும். உதராணமாக மகர லக்கிணதிற்கு லக்கினத்தில் குரு நீசம் பெற்றாலும் அங்கே அவர் திக்  பலம் அடைவதால் தனது தசையில் நன்மை செய்வார் . 
 ஒரு கிரகம் தான் திக் பலம் பெரும் 7ம் வீட்டில் திக் பலம் இழக்கும் . இதன்படி லக்கினத்தில் திக் பலம் பெரும் குரு மற்றும் புதன் 7ம் பாவத்தில் திக் பலம் இழப்பார்கள். நான்காம் வீட்டில் திக் பலம் பெரும் சுக்கிரன் மற்றும் சந்திரன் நான்காம் வீட்டிற்கு ஏழாம் வீடான பத்தாம் வீட்டில் திக் பலம் இழப்பார்கள். ஏழாம் வீட்டில் திக் பலம் பெரும் சனி லக்கினத்தில் திக் பலம் இழப்பார். பத்தாம் வீட்டில் திக் பலம் பெரும் சூரியன் மற்றும் செவ்வாய் நான்காம் வீட்டில் திக் பலத்தை இழப்பார் . திக் பலத்தை பெரும் கிரகம் ஷட் பலத்தில் 1ரூபம் பெரும் என்றால் , திக் பலத்தை இழக்கும் கிரகம் நிஷ் பலத்தை பெரும் . அதாவது ௦ ரூபம் பெரும். 

No comments:

Post a Comment