Saturday 25 May 2019

வர்க்க சக்கரம் –ஓர் பார்வை

வர்க்க சக்கரம் –ஓர் பார்வை
மாணவர் : வணக்கம் ஐயா
ஆசிரியர் : வணக்கம் . அமருங்கள் . நேற்றைய பாடம் புரிந்ததா?.
மாணவர் : புரிந்தது ஐயா. இன்று எந்த ஜோதிட தலைப்பு பற்றி விவாதிக்க போகிறோம் ஐயா.
ஆசிரியர் : சொல்கிறேன் . அதற்கு முன் ஒரு கேள்வி .
மாணவர் : கேளுங்கள் ஐயா.
ஆசிரியர் : பொதுவாக ஒரு கிரகத்தின் வலிமையை எவ்வாறு கணக்கிடலாம்?
மாணவர் : ஒரு கிரகம் ராசி மற்றும் அம்சத்தில் இருக்கும் நிலையை வைத்து அதன் வலிமையை கணக்கிடலாம் .
ஆசிரியர் : ஒரு கிரகத்தின் வலிமையை கணித்திட இந்த இரண்டு சக்கரங்கள் மட்டும் போதாது.
மாணவர் : அப்படியெனில் வேறு எப்படி கணக்கிடலாம்  ஐயா.
ஆசிரியர் : ராசி மற்றும் அம்சத்தை தவிர மற்ற வர்கத்திலும் ஒரு கிரகத்தின் நிலையை கணக்கிட வேண்டும் . நாம் இன்று பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்று புரிந்ததா?
மாணவர் : புரிந்தது ஐயா . “வர்க்க சக்கரங்கள்”
ஆசிரியர் : சரியாக கூறினாய்.
மாணவர் : அது சரி ஐயா. ராசி, அம்சத்தை தவிர  மற்ற வர்கங்கள் மூலம் ஒரு கிரகத்தின் வலிமையை எப்படி அறிவது?
ஆசிரியர் : வர்க்க சக்கரத்தில் ஆட்சி அல்லது மூல த்ரிகோணம், அல்லது உச்சம் அடைந்த கிரகங்கள் வலிமையுடன் உள்ளதாக அர்த்தம் .
மாணவர்  : இந்த வர்கங்கள் எத்தனை பிரிவுகளை உடையது ஐயா ?
ஆசிரியர் : .இந்த வர்க்கங்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம் . அவை
1.       ஷட்  வர்க்கம் ,
2.       சப்த வர்க்கம் ,
3.       தசவர்க்கம் ,
4.       சோடச வர்க்கம் .
மாணவர் : “ஷட் வர்க்கம்” என்றால் என்ன ஐயா?
ஆசிரியர் : ஷட் என்றால் “ஆறு” என்று பொருள். ஷட் வர்க்கம் என்பது ஆறு வர்க்கங்களை உள்ளடகியது ஆகும் . அவை
1.       ராசி ,
2.       ஹோரை,
3.       த்ரேக்காணாம், ,
4.       நவாம்சம்,
5.       துவாதம்சம், மற்றும்
6.       த்ரிசாம்சம் ஆகும்.
மாணவர் : “சப்த வர்க்கம்” என்றால் என்ன ஐயா?
ஆசிரியர் : சப்த என்ற வடமொழி சொல்லிற்கு “ஏழு” என்பது பொருள் . எனவே சப்த வர்க்கம் என்பது ஏழு வர்க்க சக்கரங்களை உள்ளடகியது ஆகும். அவை
   1.  ராசி ,    
2.       ஹோரை,
3.       த்ரேக்காணாம்,
4.       நவாம்சம்,
5.       துவாதம்சம்,
6.       த்ரிசாம்சம் மற்றும்
7.       சப்தாம்சம் ஆகும் .
மாணவர் : “தச வர்க்கம்” என்றால் என்ன ஐயா ?
ஆசிரியர் : தசவர்க்கம் என்பது பத்து வர்ககங்களை உள்ளடக்கியது ஆகும் . அவை
1.       ராசி, (D-1)
2.       ஹோரை , ( D-2)
3.       த்ரேக்காணாம், (D-3),
4.       சப்தாம்சம், (D-7)
5.       நவாம்சம் , (D-9)
6.       தசாம்சம் , (D-10)
7.       துவாதசாம்சம், (D-12)
8.       சோடசாம்சம், (D-16)
9.       த்ரிசாம்சம், ( D-30)
10.   ஷஸ்டியாம்சம். (D-60)
மாணவர் : “சோடசவர்கம்” என்றால் என்ன ஐயா?
ஆசிரியர் : சோடசவர்கம் என்பது பதினாறு வர்க்கங்களை கொண்டது ஆகும் . அவை தச வர்கங்களுடன் மேலும் ஆறு வர்கங்கள் சேரும். அவை
1.       சதுர்தாம்சம், (D-4)
2.       விம்சாம்சம், (D-20)
3.       சதுர்விம்சாம்சம், (D-24)
4.       சப்தவிம்சாம்சம், (D-27)
5.       காவேடாம்சம், (D-40)
6.       அக்க்ஷவேடாம்சம் (D-45)
மாணவர் :  .இந்த நான்கு வகையான வர்க்கங்களில் மிகவும் முக்கியமான வர்கங்கள் எது ஐயா?
ஆசிரியர் : மேலே கூறப்பட்டுள்ள நான்கு வகை வர்க்கங்களில் மிக முக்கியமானதது “தச வர்ககம்” மற்றும் “சோடசவர்கம்” ஆகும்.
மாணவர் : ஆனால் இதனை எப்படி கணக்கிடுவது ?
ஆசிரியர் : சோடசவர்கம் கணக்கிட சிரமப்பட வேண்டாம். ASTRO SOFT, ASTRO SAGE , போன்ற செயலியின் உதவியை கொண்டு எந்த கிரகம் அதிக வர்க்க சக்கரங்களில் ஆட்சி அல்லது மூலத்ரிகோணம், அல்லது உச்சத்தில்  உள்ளது என்பதை கண்டு அறியலாம் .  ஒரு கிரகம் எத்தனை வர்கத்தில் ஆட்சி அல்லது மூலத்ரிகோணம் அல்லது உச்சமாக உள்ளதோ அத்தனை வலிமை உடன் இருபதாக அர்த்தம்.
மாணவர் : இதற்கு ஏதேனும் சிறப்பு பெயர்கள் உண்டா?
ஆசிரியர் : இதற்கு சிறப்பு பெயர்கள் உண்டு (வைசெசிகம்சம்) . உதாரணமாக சோடசவர்கதில் (16 வர்க்கம்)  4 மதிப்பெண்கள் பெற்ற கிரகம் ( அதாவது பதினாறு வர்கத்தில் ஏதேனும்  நான்கு வர்க்கங்களில் ஒரு கிரகம்  ஆட்சி அல்லது உச்சம் அல்லது மூல த்ரிகோணம் பெறுதல்  ) இதற்கு “நாக புஷ்பாம்சம்” என்று பெயர் ... இதே போல் ஒரு கிரகம்  தச வர்கத்தில்  நான்கு மதிப்பெண்கள் பெற்றால் இதற்கு “கோபுராம்சம்” என்று பெயர் ... ( அதாவது ஒரு கிரகம் பத்து வர்க்கங்களில் ஏதேனும்  நான்கு வர்க்கங்களில் ஆட்சி அல்லது மூலத்ரிகோணம் அல்லது உச்சம் பெற்றதை குறிக்கும்) .......



No comments:

Post a Comment