Saturday 25 May 2019

திக் பலத்தை கணிக்கும் முறை

திக் பலத்தை கணிக்கும் முறை :
இப்பொழுது திக் பலத்தை எவ்வாறு கணிப்பது என்று பார்க்கலாம் . அதற்கு அடிப்படையான சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
         1ரூபம் என்பது 60 விருபங்களை கொண்டது.
          ஸ்புடம் என்பது கிரகத்தின் இருப்பிடம் ஆகும் . உதாரனமாக சூரியனின் ஸ்புடம் என்பது மேஷத்திலிருந்து (அஸ்வினி 1ம் பாதம் முதல் ) சூரியன் எத்தனை பாகை கடந்து வந்துள்ளார் என்பது ஆகும் . உதாரணமாக சூரியன் மிதுனத்தில் 15 பாகையில் உள்ளார் எனில் சூரியனின் ஸ்புடம் 75 பாகையாகும் (மேஷத்தில் 30 பாகை + ரிஷபத்தில் 30  பாகை + மிதுனத்தில் 15 பாகை ) இதேபோன்று ஒவொரு பாவத்தின் ஸ்புடதையும் கணக்கிடலாம் . உதரணமாக ஒருவருக்கு கடக லக்கினம் ஆகி லக்கினம் 20 பாகையில் உள்ளது எனில் அவரின் லகின ஸ்புடதை கணக்கிட மேஷத்தில் இருந்து லக்கினம் எத்தனை பாகைகளை கடந்து வந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும் . இப்படி பார்த்தால் 15 பாகையில் உள்ள கடக லகினத்தின் ஸ்புடம் 105 ஆகும் .
தற்போது திக் பலத்தை எவ்வாறு காண்பது என்பதை பார்போம். ஒரு கிரகத்தின் திக் பலத்தை காண அந்த கிரகத்தின் ஸ்புடத்தை, அந்த கிரகம் திக் பலம் இழக்கும் வீட்டின் ஸ்புடதோடு கழித்து வரும் தொகையை 3ஆல் வகுக்க வரும் மதிப்பே அந்த கிரகத்தின் திக் பலம் ஆகும் 

No comments:

Post a Comment