Saturday 25 May 2019

தசா –புத்தி நாதன் சஸ்டாஷ்டகம்


தசா –புத்தி நாதன் சஸ்டாஷ்டகம்-ஓர் பார்வை
சென்ற பதிவில் தசா நாதன் மற்றும் புத்தி நாதன் பற்றி உத்தரகாலாமிர்தம் விளக்கியதை பார்த்தோம்.  தசா நாதனக்கு புத்தி நாதன் 6,8,12இல் இருந்தால் அந்த புத்தி நன்மை செய்யாது என்று பார்த்தோம். ஒரு கிரகத்திற்கு இன்னொரு கிரகம் 6,8,12 இல் இருந்தால்  இதனை “சஸ்டாஷ்டகம்” என்கிறோம். ஒரு ஜாதகத்தில் லக்கின சுபர்கள் சஸ்டாஷ்டகமாக இருக்க கூடாது . அதே போல் தசை மற்றும் புத்தி நாதரும் சஸ்டாஷ்டகமாக இருக்க கூடாது என்பது விது . ஜோதிடம் ஒரு மகா சமுத்திரம் இங்கு விதி ஒன்று இருந்தால் விதி விளக்குகள் ஆயிரம் இருக்கம்.  அப்படியெனில் தசா மற்றும் புத்தி நாதன் சஸ்டாஷ்டகமாக இருந்தால் நன்மை செய்யாதா? இதற்கு விதி விளக்குகள் இல்லையா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். இக்கேள்வி எனக்குள்ளும் உதயமானது . இதற்கான விடை இன்று எனக்கு கிடைத்தது. எனது மான சீக குருநாதர் ஆதித்ய குருஜி அவர்கள் ஜோதிடம் என்னும் மஹா அற்புதம் என்ற தலைப்பில் இந்த வாரம் முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் ஜாதகத்தையும், மன்மோகன் சிங் ஜாதகத்தையும் ஒப்பிட்டிருந்தார். இந்த கட்டுரையில் சஸ்டாஷ்டகம் பற்றி விளக்கியுள்ளார்.
தசாநாதனக்கு புத்திநாதன் சஸ்டாஷ்டகமாக இருந்தாலும் கீழ் கண்ட அமைப்பில் புத்தி நாதன் இருந்தால் , அந்த புத்தி நன்மை செய்யும்.
1.       புத்தி நாதன் ஆட்சி பெறுவது ,
2.       புத்தி நாதன் உச்சம் பெறுவது.
3.       புத்தி நாதன் சுபத்துவம் மற்றும் சூட்சம வலு பெறுவது ,
இவ்வாறு புத்தி நாதன் வலுபெற்று  சஸ்டாஷ்டகமாக இருந்தாலும் அந்த புத்தி நன்மை செய்யும்.  இதை உதாரணத்தோடு குருஜி ஐயா விளக்கயுள்ளார். அம்மையார் இந்திரா காந்தி சுட்டு கொள்ளப்பட்டது சனி தசை ராகு புத்தி . அம்மையாரின் ஜாதகத்தில் சனியும் ராகுவும் சஸ்டாஷ்டகமாக உள்ளனர். மேலும் மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சிக்கு வந்தது ராகு தசையில் உச்ச புதன் புத்தியல் . இவருடைய ஜாதகத்தில் ராகுவும், புதனும்( உச்சம்)  சஸ்டாஷ்டகமாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. எனவே சஸ்டாஷ்டகமான தசா, புத்தி நாதர் ஒருவருக்கு மரணத்தையும் மற்றொருவருக்கு  ஆட்சியையும் கொடுத்தது  என்று ஐயா ஆதித்ய குருஜி விளக்கியுள்ளார்.






No comments:

Post a Comment