Saturday 25 May 2019

தசா மற்றும் புத்தி பலனறியும் விதம்


தசா மற்றும் புத்தி பலனறியும் விதம் பற்றி உத்தரகாலாமிர்தம் உரைப்பது:
1.       தசா நாதன் இருக்கும் ராசியை லக்கினமாக கொண்டு புத்தி நாதன் இருக்கும் வீட்டை ஆய்வு செய்ய வேண்டும்.
2.       தசாநாதனக்கு 6,8,12 இல் புத்தி நாதன் இருக்க கூடாது .
3.       இவ்வாறு இருந்தால் தசா நாதனக்கு புத்தி நாதன் பகைவராகிறார். எனவே அந்த புத்தி நற்பலன்களை தராது .
4.       தசா நாதனக்கு 2,3,4,5,9,10,11இல் உள்ள கிரகங்கள் தற் கால மித்ரு (நண்பர்) ஆகும் . எனவே இவர்களின் புத்தி நன்மை தரும் (பொது பலன் )
5.       தசா , புத்தி நாதர்கள் கேந்திரம் மற்றும் த்ரிகோணதிற்கு அதிபதியாக வந்தால் நன்மை செய்வார்கள் .
6.       தசா மற்றும் புத்தி நாதர்கள் 2,3,11 க்கு அதிபதியாக வந்தால் மத்திமமான பலன்களை செய்வார்கள்.
7.       தசா மற்றும் புத்தி நாதர்கள் 6,8,12 க்கு அதிபதியாக வந்தால் தீமை செய்வார்கள் .
8.       ஒரு தசா நாதன் சுய புத்தியில் நன்மை செய்வது கடினம் .
9.       ராஜயோக தசையில் சுயபுத்தி நன்மை செய்யும்.
   மேலும் புத்தி நாதர் தசா நாதனக்கு கட்பட்டவர் என்பது பொதுவான கருத்து. “Gragha and Bhava Balas” என்ற நூலில் இதன் ஆசிரியரான B.V ராமன் ஷட் பலத்தை பற்றி விளக்கும்போது அதிக ஷட் பலம் பெற்ற கிரகம் தனது புத்தியல் தசா நாதனையும் மீறி பலன் செய்யும் என்று உதாரணத்தோடு விளக்குகிறார்.


No comments:

Post a Comment